Skip to main content

இந்தியாவில் மொத்தமே இவ்வளவு புலிகள் தானா? - புலிகள் தினத்தில் வெளியான புதிய தகவல்

Published on 29/07/2023 | Edited on 29/07/2023

 

World Tiger Day; Number of Tigers in India; Information published in the survey

 

இன்று உலகளாவிய புலிகள் தினம். பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு முக்கிய காரணியாக இருக்கும் புலிகள் இன்றைக்கு அரிய வகை உயிரினமாக மாறி வருகிறது. நிலவியல் கொள்கை மாற்றத்தாலும், மனித ஆக்கிரமிப்புகளால் வனப்பகுதி சுருங்குவதால் புலிகள் நெருக்கடியை எதிர்கொள்வதாக எச்சரிக்கை விடுக்கிறது தேசியப் புலிகள் பாதுகாப்பு நிறுவனம். வாழ்விட இழப்பு, வேட்டையாடுதல் போன்றவை புலிகளின் உயிர்வாழுதலுக்குத் தொடர்ந்து அச்சுறுத்தலாகவே இருக்கின்றன. இந்தியாவின் தேசிய விலங்காகக் கொண்டாடப்படும் புலிகள் வாழ்வதற்கு நிலமும், வனமுமற்று மனிதர்கள் வாழும் பகுதிகளில் உட்புகும் செய்திகள் பேராபத்தை நமக்கு உணர்த்துகிறது.

 

ஒரு வனத்தில் புலிகள் அதிகம் இருக்கிறதென்றால், அவை வாழ்வதற்கேற்ற நீர், உணவு, பாதுகாப்பான வனம், உலவுவதற்கான பரந்த நிலம் யாவும் கிடைக்கப் பெறுவதாகப் பொருள் கொள்ளப்படுகிறது. உணவுச் சங்கிலியைக் காப்பாற்றுவதிலும், பல்லுயிர்ப் பெருக்கத்தைத் தக்க வைப்பதிலும் புலிகள் மிக முக்கியக் காரணியாக விளங்குகிறது. இந்தியாவில் உள்ள வனப்பரப்பில் மொத்தமாக 3,925 புலிகள் உள்ளதாக இந்திய வன உயிரின ஆய்வு மையம் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

 

இந்தியாவில் அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 785 புலிகளும், கர்நாடகாவில் 563, உத்தராகண்ட்டில் 560, மராட்டியத்தில் 444 புலிகள் உள்ளன. தமிழ்நாட்டில் முதுமலை முகாமில் 114 புலிகளும், சத்தியமங்கலத்தில் 85 புலிகளும் உள்ளதாகக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. நாட்டில் மொத்தமுள்ள 51 வன உயிர்க் காப்பகங்களில் தமிழ்நாட்டின் முதுமலை, ஆனைமலை உட்பட 12 காப்பகங்கள் சிறந்தவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

நடு நெற்றியில் சுத்தியல் அடி; வனப்பகுதியில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்

Published on 09/07/2024 | Edited on 09/07/2024
Hammer blow in middle forehead; A shocking incident in the forest

                                          கொலை செய்யப்பட்ட குமார்       

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் தாயுடைய ஆண் நண்பரை மகன் சுத்தியால் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு உட்பட்டது தலைமலை பகுதி. வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த பகுதியில் வசித்து வருபவர் முத்துமணி. இவர் தன்னை விட மூன்று வயது சிறியவராக உள்ள குமார் என்பவருடன் முறையற்ற தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை முத்துமணியின் மகன் கடுமையாக எதிர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு மேலாக காணாமல் போன குமாரை போலீசார் தேடி வந்தனர்.

Hammer blow in middle forehead; A shocking incident in the forest

                                   கைது செய்யப்பட்ட நாகமல்லு , மாதேஸ்வரன், முத்துமணி       

தொடர்ந்து தொட்டபுரம் வனப்பகுதியில் இருந்து அழுகிய நிலையில் குமாரின் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து முத்துமணியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தோட்டத்தில் தன்னிடம் குமார் தனியாக பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்து தன்னுடைய மகன் நாகமல்லு கையில் வைத்திருந்த சுத்தியலால் குமாரை நெற்றியில் தாக்கியதால் சம்பவ இடத்திலேயே குமார் உயிரிழந்ததாகவும் குமாரின் உடலை மகன் நாகமல்லுவும் அவருடைய நண்பரான மாதேஸ்வரனும் சேர்ந்து வனப்பகுதியில் தூக்கி எறிந்ததாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நாகமல்லு, மாதேஸ்வரன், முத்துமணி ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். நெற்றியில் சுத்தியால் அடித்துக் கொல்லப்பட்டு வனப்பகுதியில் வீசப்பட்ட இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

மாஞ்சோலை விவகாரம்; புலிகள் பாதுகாப்பு ஆணையம் தமிழக வனத்துறைக்குக் கடிதம்!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
Manjolai Affair Tiger Conservation Commission letter to Tamil Nadu Forest Dept

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சுமார் 75,000 ஏக்கர் பரப்பளவு காடுகளில் 8,000 ஏக்கர் நிலப்பரப்பு தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனத்திற்காக 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. இந்தக் குத்தகை 2028 ஆம் ஆண்டில் முடிவடைகிறது. மாஞ்சோலை, மணிமுத்தாறு, ஊத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொழிலாளர்கள் தங்கி அங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றி வந்தனர். குத்தகை முடிவதற்கு முன்பாகவே தனியார் நிறுவனம் ஒன்று தங்களுடைய பணியை நிறுத்திக் கொள்வதாக தகவல் வெளியாகி இருந்தது.

இதனையடுத்து, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தங்களுடைய நலனுக்காக விருப்ப ஓய்வு பெற்றுக் கொள்ளலாம் என இதற்கான அறிவிப்பை தனியார் நிறுவனம் நோட்டீஸ் வாயிலாக வெளியிட்டது. மேலும், அங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையிலும் அந்தத் தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் இருந்து ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு முன்னதாக தொழிலாளர்கள் வெளியேற வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. 

அதே சமயம் மாஞ்சோலை மக்களை அங்கிருந்து வற்புறுத்தி வெளியேற்றுவதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் மாஞ்சோலை விவகாரத்தில் தமிழக வனத்துறையிடம் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக வனப்பாதுகாவலருக்கு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

அந்தக் கடிதத்தில், “திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள மாஞ்சோலை, காக்காச்சி, நாலமூக்கு, ஊத்து மற்றும் குதிரைவெட்டி கிராமங்களில் உள்ள பாரம்பரிய பழங்குடி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது தொடர்பாக கிருஷ்ணசாமியின் கடிதம் வரப்பட்டுள்ளது. எனவே, இது குறித்த உண்மை நிலை மற்றும் அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கையை விரைவில் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.