சாலையிலுள்ள பள்ளங்களை சரி செய்யாத பாஜக அரசை கண்டித்து நவநிர்மாண் சேனா கட்சியினர் மராட்டிய மாநில தலைமை செயலகமான ''மந்த்ராலயாம்''முன் உள்ள சாலையை சேதப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

Advertisment

மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக ஏற்பட்டுள்ள சாலை பள்ளங்களை பாஜக அரசு சீர்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே பாதசாரிகள் மற்றும் வாகனங்கள் பள்ளத்தில் சிக்கிகொள்கின்றன. இதுபோன்ற சம்பவத்தால் பலர் இறந்தும் உள்ளனர். ஆனால் பாஜக அரசு இதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி நேற்றுபாஜக அலுவலகம் முன்னுள்ள சாலையை ஆயுதங்களை பயன்படுத்திசேதப்படுத்தும் போராட்டம் நடத்திகோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் சேதப்படுத்திய வீடியோவை வெளியிட்டு அது வைரலாகியும் வருகிறது.