காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த வாரம் லண்டன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர், எகிப்தை சேர்ந்த முஸ்லீம் ப்ரதர் ஹூட் தீவிரவாத அமைப்பும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் ஒன்றுதான் என்று சொன்னார்.
இதற்கு பாஜகவில் இருந்து ராகுல் காந்தி மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் என்றனர். பலர் ராகுல் காந்தியை விமர்சிக்க தொடங்கினர்.
— Divya Spandana/Ramya (@divyaspandana) August 29, 2018
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் திவ்யா ஸ்பந்தனா(ரம்யா) ராகுல் காந்தியின் ஒப்பிட்டுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், இவ்விரு அமைப்புகளின் ஒற்றுமையை எடுத்துக்காட்டியுள்ளார். 1920 ஆம் ஆண்டுதான் இவ்விரு அமைப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன. எகிப்தில் அரப் ஸ்ப்ரிங் என்ற எழுச்சியின் காரணமாகத்தான் முஸ்லீம் ப்ரதர்ஹுட்டிற்கு ஊக்கம் அளிக்கப்பட்டது,மோரிஸ் வெற்றிபெற்றார். இதுபோல ஊழலுக்கு எதிராக அண்ணா ஹசாரேவின் எழுச்சியின் காரணமாகத்தான் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு ஊக்கம் கிடைத்தது, மோடி வெற்றிபெற்றார் என்று ஒப்பிட்டுள்ளார்.