Published on 03/11/2018 | Edited on 03/11/2018
ஜியோ வாடிக்கையாளர்களாக கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் புதிதாக 1.3 கோடி பேர் இணைந்துள்ளனர். இந்த வருடம் ஆகஸ்ட் வரை ஜியோவின் வாடிக்கையாளர்களாக 23.9 கோடி பேர் இருந்தனர். தற்போது புதிதாக இணைந்துள்ள இந்த 1.3 கோடி பேருடன் சேர்த்து ஜியோவின் மொத்த வாடிக்கையாளர்கள் 25.2 கோடி பேராக உள்ளனர்.
![jj](http://image.nakkheeran.in/cdn/farfuture/TTzkKltX6V8_rioO8VNKV_Y2Fl4-pJGB4wpXVYvO230/1541266456/sites/default/files/inline-images/jio-5-g-in-1_2.jpg)
அதேசமயம் ஏர்டெல் நிறுவனம் ஆகஸ்ட் மாதத்திலிருந்து செப்டம்பர் மாத்திற்குள் 23.58 இலட்சம் பேரை இழந்துள்ளது. ஆகஸ்ட் மாதம் நிலவரப்படி ஏர்டெலின் மொத்த வாடிக்கையாளர்கள் 34.58 கோடியாக இருந்தனர். ஆனால் செப்டம்பர் மாதம் இறுதியில் இந்த எண்ணிக்கை 34.35 கோடியாக குறைந்துள்ளது. இந்த நிலையில் ஜியோ புதிதாக தன் வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி தமாகா என்று பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.