Skip to main content

வீதிகளில் இறங்கி போராடும் மக்கள்... இயல்புநிலையை இழந்த வடகிழக்கு மாநிலங்கள்...

Published on 10/12/2019 | Edited on 10/12/2019

2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையிலான குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தாக்கல் செய்தார்.

 

north east people protest against cab 2019

 

 

சுமார் 7 மணி நேரம் நடந்த விவாதத்திற்கு பிறகு மக்களவையில் நடந்த வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 311 வாக்குகளும் எதிராக 80 வாக்குகளும் கிடைத்தன. மசோதா மக்காவையில் வெற்றிபெற்றதை அடுத்து நாடு முழுவதும் பல இடங்களில் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

மத ரீதியிலான குடியுரிமை வழங்குவது என்பது இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் மதச்சாற்பற்றத்தன்மை ஆகிய கொள்கைகளுக்கு எதிரானது என்ற முழக்கங்களுடன் போராட்டங்கள் நடந்து வருகிறது, அந்த வகையில் அசாம், அருணாசலப் பிரதேசம், மேகாலயம், நாகாலாந்து, மிஸோரம், மணிப்பூா், திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் முழு அடைப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. முழு அடைப்பு காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலங்கள் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மணிப்பூருக்கு இரயில் சேவை நிறுத்தம்! 

Published on 05/05/2023 | Edited on 05/05/2023

 

Rail service to Manipur stopped!

 

மணிப்பூர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சி நடந்து வருகிறது. இந்த மாநிலத்தின் முதல்வராக பிரேன் சிங் இருந்து வருகிறார். இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் எனும் பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களைப் பட்டியலின பழங்குடியினர் சமூகத்தில் இணைத்து அதற்கான அந்தஸ்து வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதற்கு மற்ற பழங்குடியின சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

 

இதற்காகப் பழங்குடியினர் மாணவர் அமைப்பு நடத்திய பேரணியில் கலவரம் ஏற்பட்டு மணிப்பூரில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குத் தீ வைக்கும் சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன. மணிப்பூர் கலவரம் குறித்து குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தனது ட்விட்டர் பக்கத்தில், “என் மாநிலம் மணிப்பூர் எரிகிறது. தயவு செய்து உதவுங்கள்” எனப் பதிவிட்டு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை டேக் செய்திருந்தார். 

 

இதனைத் தொடர்ந்து மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், “இந்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் வன்முறைகள் நடந்துள்ளன. இவை இரு பிரிவினரிடையே ஏற்பட்ட தவறான புரிதல்களால் நடந்துள்ளன. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர மாநில அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது” என்றார். 

 

நேற்று மாலை அம்மாநில ஆளுநர் கலவரக்காரர்களைக் கண்டவுடன் சுட உத்தரவு பிறப்பித்தார். தொடர்ந்து கலவரம் நீடித்து வரும் நிலையில் கலவரத்தைக் கட்டுப்படுத்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்திருந்தது. 

 

இந்நிலையில், வடகிழக்கு இரயில்வே ‘நிலைமை சீராகும் வரை மணிப்பூருக்குள் எந்த ரயில்களும் இயக்கப்படாது. ரயில் இயக்கத்தை நிறுத்த மணிப்பூர் அரசு அறிவுறுத்தியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளது. 

 

 

Next Story

சிக்கிமில் பனிச் சரிவு; சுற்றுலா சென்றவர்களுக்கு நேர்ந்த துயரம்!

Published on 05/04/2023 | Edited on 05/04/2023

 

sikkim nathula snow slide tourist incident rescue team involved

 

சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச் சரிவில் சிக்கி சுற்றுலா பயணிகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாதுலா என்ற பகுதி இந்தியா - சீனா எல்லை பகுதியில் உள்ள சுற்றுலாத் தளம் ஆகும். உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்குள்ள இயற்கை காட்சிகளை காண வருகின்றனர். இந்நிலையில் கேங்டாக் - நாதுலாவை இணைக்கும் ஜவஹர்லால் நேரு சாலையின் 14வது மைல்கல் பகுதியில் நேற்று காலை 11.30 மணியளவில் திடீரென பனிச் சரிவு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு இருந்த சுமார் 30 சுற்றுலா பயணிகள் இந்த பனிச் சரிவு விபத்தில் சிக்கியதாகத் தெரிய வந்துள்ளது.

 

இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த மீட்புப் படையினர் பனிச் சரிவில் சிக்கியவர்களை கடும் போராட்டத்திற்கு பிறகு சுமார் 23  பேரை போராடி உயிருடன் மீட்டனர். மேலும் பனிச்சரிவில் சிக்கி ஒரு குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்களும் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டது. வேறு யாரேனும் பனிச் சரிவில் சிக்கி உள்ளனரா என மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பனிச் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.