Skip to main content

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ஊழல், முதலை கண்ணீர்.. உள்ளிட்ட சொற்கள் பயன்படுத்தத் தடை! 

Published on 14/07/2022 | Edited on 14/07/2022

 

Prohibited use of words such as corruption in the parliamentary session!

 

நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் வரும் திங்கள் கிழமை (18ம் தேதி) துவங்குகிறது. 18 அமர்வுகளாக நடைபெறும் இந்தக் கூட்டத்தொடர் அடுத்த மாதம் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், நுபுர் ஷர்மா விவகாரம், அக்னிபாத் திட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளன.  

 

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை மற்றும் மக்களவையில் பயன்படுத்த தடை செய்யப்பட்ட சொற்கள் என ஒரு பட்டியலை மக்களவைச் செயலகம்    புத்தகமாக வெளியிட்டுள்ளது.

 

அந்தப் பட்டியலில் இந்தி மற்றும் ஆங்கில சொற்கள் அதிகளவில் இடம் பெற்றுள்ளன. மேலும், தடையை மீறி அந்தச் சொற்கள் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தப்பட்டால் அவைத் தலைவர்கள் அந்தச் சொற்களை நாடாளுமன்ற அவைக் குறிப்பில் இருந்து நீக்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள சொற்கள்; ‘வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுக் கேட்பு ஊழல், கரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி, இரட்டை வேடம், பயனற்றது, நாடகம், ரத்தக்களரி, குரூரமானவர், ஏமாற்றினார், குழந்தைத்தனம், கோழை, கிரிமினல், முதலை கண்ணீர், அவமானம், கழுதை, கண்துடைப்பு, ரவுடித்தனம், போலித்தனம், தவறாக வழிநடத்துதல், பொய், உண்மையல்ல, முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள், லாலிபாப், பாப்கட் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. 

 

 

சார்ந்த செய்திகள்