மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஶ்ரீ எல்.ஆர். திவாரி பொறியியல் கல்லூரியில் கூகுள் நிறுவனம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைப்பெற்றது. இதில் அதே கல்லூரியை சேர்ந்த அப்துல்லா கான் என்ற மாணவன் கூகுள் நிறுவனத்தில் மூலம் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கம்பியூட்டர் பொறியியல் பிரிவை சேர்ந்தவர். அப்துல்லா கானின் வயது 21 ஆகும்.இவருக்கு ஆண்டு வருமானம் மற்றும் போனஸ் உள்ளிட்டவை சேர்த்து ஆண்டுக்கு சுமார் 1.2 கோடியை சம்பளமாக வழங்குகிறது கூகுள் நிறுவனம்.
இவருக்கு இங்கிலாந்தில் உள்ள லண்டன் கூகுள் அலுவலகத்தில் பணி செய்ய ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பம்சங்கள் என்னவென்றால் முதன் முதலாக ஒரு தனியார் கல்லூரியில் பயின்ற மாணவனை பணியில் அமர்த்தி அதிக சம்பளம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐஐடி கல்லூரியை தவிர்த்து தனியார் பொறியியல் கல்லூரிக்கு கூகுள் நிறுவனம் வர தொடங்கியுள்ளதால் பொறியியல் படிக்கும் மாணவர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
பி . சந்தோஷ் , சேலம் .