Skip to main content

பாப் பாடகருக்கு இரண்டாண்டு சிறை! 

Published on 17/03/2018 | Edited on 17/03/2018

பஞ்சாப் பாப் பாடகர்  தலெர் மெஹந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து பாட்டியாலா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 

 

daler mehendi



தன் இசைக் குழுவுடன் அமெரிக்கா செல்வதாக கூறி, வேறு சிலருக்கும் விசா வாங்கி சட்டவிரோதமாக அமெரிக்கா கூட்டிச் சென்றதற்காக கடந்த 2003ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. அவரும் அவரது சகோதரர் சம்ஸர் சிங்கும் 1998 மற்றும் 1999 ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு சென்று படல் நிகழ்ச்சிகள் நடத்த சென்றிருக்கின்றனர். அவர்களுடன்  சென்றவர்களில் பத்து பேர் அங்கேயே விடப்பட்டு வந்திருக்கின்றனர். இதற்காக ஒரு கோடி ரூபாய் பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. பின்னர், பாட்டியாலா காவல்துறை வழக்கு பதிவு செய்து இப்பிரச்சனையயை பற்றி விசாரிக்க ஆரம்பித்தது. சாட்சிகள் அனைத்தும் வலுவாக இருக்க, நேற்று (16 மார்ச்) இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தலெர் மெஹந்தி, உடனடியாக பெயிலும் வாங்கியிருக்கிறார். வெளியே வந்தவர், "நான் மீண்டும் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யவுள்ளேன்" என்று கூறியிருக்கிறார்.              

சார்ந்த செய்திகள்