Skip to main content

''ஒரு நிமிடம் கூட ஆட்சியில் இருக்க அருகதை இல்லை'' - அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் காட்டம்!   

Published on 16/02/2021 | Edited on 16/02/2021

 

 Pondicherry AIADMK MLA

 

புதுச்சேரியில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி காமராஜ் நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜான்குமார், அவரது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் அதற்கான கடிதத்தை வழங்கியுள்ளார்.

 

புதுச்சேரியில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் கட்சியைச் சேர்ந்த இரு எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், மேலும் ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா செய்துள்ளது அம்மாநில காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 4 பேர் இதுவரை ராஜினாமா செய்துள்ளதால் காங்கிரசின் பலம் 10 ஆக குறைந்துள்ளது. 10 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், மூன்று திமுக எம்.எல்.ஏக்கள், ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ ஆதரவு என மொத்தம் 14 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதேபோல் எதிர்க்கட்சி பலமும் 14 எம்.எல்.ஏக்கள் என உள்ளது. இந்தச் சூழலை எப்படி எதிர்கொள்வது என சபாநாயகர் சிவக்கொழுந்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமயிலான அமைச்சரவை ராஜினாமா செய்ய இருப்பதாக அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி மேலும் பரபரப்பைக் கூட்டி இருக்கிறது. 

 

 Pondicherry AIADMK MLA

 

இந்நிலையில் புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “தார்மீகப் பொறுப்பேற்று புதுவை முதல்வர் நாராயணசாமி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். ஒரு நிமிடம் கூட ஆட்சியில் நீடிப்பதற்கு அருகதை இல்லை. நாராயணசாமிக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்காது. நம்பிக்கையிருக்கும் யாராக இருந்தாலும் இந்த நிலையில் பதவியில் இருக்க மாட்டார்கள், பதவி விலகிவிடுவார்கள். இப்பொழுதும் ராஜினாமா செய்யவில்லையென்றால் சுயநல சிந்தனை உள்ளவர்கள் காங்கிரஸ், திமுக மாதிரி யாரும் இல்லை'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்