உத்தரப்பிரதேச மாநிலத்தில் மூன்றாம் கட்ட சட்டப்பேரவை தேர்தல், காலை எழு மணியளவில் தொடங்கியுள்ளது. இந்த மூன்றாம் கட்ட தேர்தலில் 16 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடும் கர்ஹல் தொகுதியும் அடங்கும். அகிலேஷ் யாதவ், சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஹத்ராஸ் தொகுதியிலும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம், இந்தியாவையே உலுக்கிய நிலையில், அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தயார், ஹத்ராஸ் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் மாநிலத்திலும் காலை 7 மணியளவில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இத்தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டம், இத்தேர்தலில் மிகப்பெரிய அளவில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.