'மன் கி பாத்' என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது;, "பறவை மனிதர் என்றழைக்கப்படும் சலீம் அலி, பறவைகளை ரசிக்க, அவை குறித்த தகவல்களை திரட்ட நமக்கு பாடங்களைக் கற்றுக் கொடுத்துள்ளார். மிகவும் பழமையான தேவி அன்னபூரணி சிலை கனடா நாட்டில் இருந்து மீட்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன் வாரணாசியில் இருந்து கடத்தப்பட்ட சிலை இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. டெல்லியில் தேசிய அருங்காட்சியகத்திற்கு செல்லாமல் வீட்டில் இருந்த படியே நாம் காணொளியில் பார்க்கலாம்.
இந்தியாவின் கலாச்சாரம், வேதம் எப்போதும் உலகை ஈர்க்கும் மையமாக இருந்து வருகிறது. நியூசிலாந்து நாட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கவுரவ் சர்மா அமைச்சராக சமஸ்கிருதத்தில் பதவியேற்றார். இந்திய கலாச்சாரத்தை வெளிநாடுகளில் பரப்புவது மிகவும் பெருமையளிக்கிறது. டெல்லி ஐஐடியில் முன்னாள் மாணவர்கள் பல்வேறு வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு அதிகாரம் மற்றும் புதிய வாய்ப்புகளை வழங்கியுள்ளது. வேளாண் சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்கு புதிய கதவுகளைத் திறந்துள்ளது.
கரோனா தடுப்பூசி விரைவிலேயே பயன்பாட்டுக்கு வந்துவிடும். கரோனா பரவலால் ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து நாம் கவனமுடன் இருக்க வேண்டும்." என தெரிவித்துள்ளார்.