Skip to main content

“70 வயது முதியவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” - பிரதமர் மோடி வேதனை

Published on 29/10/2024 | Edited on 29/10/2024
PM Modi's anguish to he apologize to the 70-year-olds

தலைநகர் டெல்லியில், உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் (AIIA) ரூ.12,850 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். நாட்டின் 9வது ஆயுர்வேத தினம் மற்றும் மருத்துவ கடவுளான தன்வந்திரியின் பிறந்தநாள் கொண்டாடும் வகையில், இந்த திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது, “சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலின் போது, 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் அனைவரையும் ‘ஆயுஷ்மான் யோஜனா’ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டு வருவேன் என உறுதி அளித்திருந்தேன். இன்று தன்வந்திரி ஜெயந்தி நாளில் இந்த உத்தரவாதம் நிறைவேற்றப்படுகிறது. அதன்படி, நாட்டிலுள்ள 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், ஆயுஷ்மான் வயா வந்தனா காப்பீட்டு அட்டை இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம், குடும்பச் செலவுகளும் குறையும், அவர்களின் கவலைகளும் குறையும். 

டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு என்னால் இந்த சேவையை செய்ய முடியவில்லை என்று மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் வலிகளையும், துன்பங்களையும் பற்றி நான் அறிந்து கொள்வேன். ஆனால் என்னால் உங்களுக்கு உதவ முடியாது. டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள அரசாங்கங்கள் தங்கள் அரசியல் லாபத்திற்காக இந்த திட்டத்தை அமல்படுத்தவில்லை” என்று தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்