இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது அதன் தாக்கம் குறைந்துவருகிறது. அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய இந்தக் கரோனா இரண்டாவது அலையில், மருத்துவர்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்திய மருத்துவக் கூட்டமைப்பு, மாநில வாரியாக உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்திய மருத்துவக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியா முழுவதும் கரோனா இரண்டாவது அலைக்கு 719 மருத்துவர்கள் பலியாகியுள்ளனர். நாட்டிலேயே அதிகபட்சமாக பீகாரில் 111 மருத்துவர்களும், டெல்லியில் 109 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் 79 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்திய மருத்துவக் கூட்டமைப்பின் தகவலின்படி தமிழ்நாட்டில் 32 மருத்துவர்கள் கரோனா இரண்டாவது அலையில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.