Skip to main content

பென்சன் உயர்வு வேண்டும்! - பாராளுமன்ற கமிட்டி பரிந்துரை!

Published on 23/12/2021 | Edited on 23/12/2021

 

Pension needs a hike! - Parliamentary Committee Recommendation!

 

பென்சன் பெறும் ஊழியர்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, பென்சன்தாரர்களுக்கான நலன்களைப் பற்றி பல முடிவுகளை எடுத்துள்ளது. அந்த முடிவுகளைப் பரிந்துரைகளாக தாக்கல் செய்துள்ளது. நிலைக்குழு தாக்கல் செய்துள்ள பரிந்துரைகளில், "ஓய்வூதியர்களின் குறைகள் தீர்க்கப்படுவதில் காலதாமதம் நிகழ்வது ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களின் குறைகளைத் தீர்ப்பதற்காகவே கமிட்டிகள் அமைக்கப்பட வேண்டும். அமைக்கப்படும் சமூக தணிக்கைக் குழு, ஓய்வூதியர்கள் எந்தப் பிரச்சினைகளில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள், எந்தெந்த பகுதிகளில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை எல்லாம் தீர்மானித்து, தீர்வுகள் காண வேண்டும்.

 

ஓய்வூதியர்களின் அடிப்படை பென்சன் 5 வருடங்களுக்கு ஒருமுறை உயர்த்தப்பட வேண்டும் என்ற அவர்களது சங்கங்களின் வேண்டுகோளை கமிட்டி ஏற்கிறது. 

 

65 வயதில் 5 %
70 வயதில் 10%
75 வயதில் 15%
80 வயதில் 20 %
உயர்வு தரப்படலாம்.

 

ஓய்வூதியர்களின் நிறைவேறா குறைகள் அதிகமாகிக்கொண்டே இருப்பதால், கமிட்டி அமைத்து தீர்க்க வேண்டும். அமுலில் உள்ள, அடிப்படை ஓய்வூதியத்தின் உயர்வுகள் விகிதத்தை, 

80 வயதானால் 20%
85 வயதானால் 30%
90 வயதானால் 40 %
95 வயதானால் 50% 
100 வயதானால் 100%
என்பதை இந்தக் குழு ஏற்கிறது.  

 

ஓய்வூதியர்கள் மனம் நிறைந்த வாழ்வை வாழ, மேன்மைப்படுத்தப்பட்ட பென்சன் விகிதங்களை அனுமதிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அவர்களுக்குத் தைரியத்தையும், தனித்து வாழும் ஆற்றலையும் ஓய்வூதியம் மட்டுமே தரும்” என்பது உள்பட பல்வேறு பரிந்துரைகளை மத்திய அரசுக்கு தங்களின் அறிக்கையில் தெரிவித்துள்ளது நாடாளுமன்ற நிலைக்குழு.

 

 

சார்ந்த செய்திகள்