Skip to main content

பிராட்வே பேருந்து நிலையம் தற்காலிகமாக இடமாற்றம்

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Broadway Bus Station temporarily relocated

சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தை தற்காலிகமாக தீவுத்திடலில் இடமாற்றம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிராட்வேயில் 'மல்டி மோடல் இன்டகிரேஷன்’ என்ற ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அமைக்கும் பணிகள் தொடங்க இருப்பதால் கட்டுமான பணிகளுக்காக பிராட்வே பேருந்து நிலையம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படவுள்ளது. சென்னை தீவுத்திடலில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க சென்னை மாநகராட்சி சார்பில் ரூபாய் 5 கோடி செலவில் அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளன.

அடுத்த சில மாதங்களில் பிராட்வே பேருந்து நிலையம் தீவுத்திடலுக்கு இடமாற்றம் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதன்பிறகு பிராட்வே பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு போக்குவரத்து முனையம் அமைக்கும் பணி தொடங்கும். பிராட்வே பேருந்து நிலையம் இருக்கும் இடத்தில் 9  மாடிகளைக் கொண்ட வணிக வளாகத்துடன் கொண்ட பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது. குறளகம் கட்டடம் இடிக்கப்பட்டு 10 மாடிகளைக் கொண்ட வணிக வளாகம் கட்டப்படவுள்ளது. அங்கிருந்து மெட்ரோ ரயில் நிலையம், புறநகர் ரயில் நிலையம் என்று அனைத்தையும் இணைக்கும் வகையில் 7 நடை மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சார்ந்த செய்திகள்