உத்தரப் பிரதேச மாநிலம், பரேலி மாவட்டம் மாதோபூர் பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஷூமைலா கான் என்ற பெண் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய சான்றிதழ்கள் சரிபார்ப்பு செயல்பாட்டின் போது ஆவணங்களின் நம்பகத்தன்மை குறித்து என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், ஷூமைலா கானிடம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையின், ஷூமைலா பாகிஸ்தானைச் சேர்ந்தவரும் என்பதும், தனது அடையாளத்தை மறைத்து போலி சான்றிதழை சமர்பித்து அரசு ஆசிரியராக பணியாற்றி வந்திருக்கிறார் என்பதும் தெரியவந்தது.
அதனை தொடர்ந்து, கடந்தாண்டு அக்டோபர் ஷூமைலா கானை பணியில் இருந்து நீக்கம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டார். இந்த நிலையில், மாவட்ட கல்வி அதிகாரியின் விசாரணை மற்றும் உத்தரவின் பேரில், ஃபதேகஞ்ச் பஸ்சிமி காவல் நிலையத்தில் ஷூமைலா கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது