Skip to main content

தாய்க்கு நேர்ந்த கொடூரம்; மகனின் வெறிச்செயல் - நள்ளிரவில் திக் திக்!

Published on 25/05/2024 | Edited on 25/05/2024
Son incident mother in Madhya Pradesh

மத்தியப் பிரதேசம் மாநிலம் ரத்லம் மாவட்டம் சரவன் கிராமத்தைச் சேர்ந்தவர் மாலியா பீல் - ஜீவாபாய் தம்பதியினர். இவர்களுக்கு ஆஷா ராம்(30) என்ற மகன் உள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு உணவு அருந்துவது தொடர்பாகத் தாய் ஜீவாபாய்க்கும், ஆஷாராமுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. இந்த வாக்குவாதம் எல்லையை மீறிச் சென்ற நிலையில் தந்தை மாலியா பீல் தலையிட்டு பிரச்சனையைக் கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஆஷாராம் கோபித்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியே சென்றார்.

இதனைத் தொடர்ந்து தந்தை மாலியா பீல் தூங்கிய பிறகு நள்ளிரவில் வீட்டிற்கு வந்த ஆஷாராம் தூங்கிக்கொண்டிருந்த ஜீவாபாயை கற்கள் மற்றும் கட்டை கொண்டு தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ஜீவாபாய் உயிரிழந்தார். மேலும் இதனை யாரும் கண்டுபிடிக்காதவாறு வீட்டின் வாசலில் உள்ள மரத்தில் ஜீவாபாய் தற்கொலை செய்துகொண்டது போல சோடிக்கத் தாயின் உடலை மரத்தில் தொங்கவிட முயற்சித்துள்ளார்.

இது குறித்து போலீசாருக்கு மாலியா பீல் தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜீவாபாயின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய ஆஷாராமை தேடி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்