றுமையின் பிடியில் பின்னைக்காய் எண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் அரசுப் பள்ளியில் படித்து, இன்றைக்கு இஸ்ரோவின் தலைவராக உயர்ந்து நிற்கும் குமரி மாவட்டம் மேலக்காட்டுவிளையைச் சேர்ந்த முனைவர் வி.நாராயணனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

அரசுப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து, அதன்பிறகு கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழில் டிப்ளமோ முடித்த நிலையில், இஸ்ரோவில் தொழில்நுட்ப உதவியாளராகப் பணியில் நுழைந்த நாராயணன், தன்னுடைய தொடர் உழைப்பால், உலக நாடுகளையே இந்தியாவைத் திரும்பிப்பார்க்க வைத்த கிரையோஜெனிக் எஞ்சின் உருவாக்கத்தில் திட்ட இயக்குநராகப் பங்காற்றி பெருமை தேடித்தந்து, தற்போது இஸ்ரோவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நக்கீரனுக்காக முனைவர் நாராயணனை அவருடைய சொந்த கிராமத்தில் சந்தித்தோம்...

ss

மிகவும் எளிய குடும்பப் பின்னணியிலிருந்து வந்து, தற்போது உயர்ந்த இடத்தை எட்டிப் பிடித்திருப்பதை எப்படி உணருகிறீர்கள்?

இஸ்ரோவில் எத்தனையோ திறமையானவர்கள் இருக்கும்போது என் மீது நம்பிக்கை வைத்து இந்த பெரிய பொறுப்பை அளித்த பிரதமர் மோடிக்கும், இறைவனுக்கும் நன்றி. தாங்கள் படிக்காத நிலையில், பிள்ளைகளை நன்றாகப் படிக்கவைக்க வேண்டுமென்ற என் பெற்றோரின் அந்த நல்ல எண்ணமும், அவர்களின் ஆசியும், எனக்கு கற்பித்த ஆசிரியர்களின் ஆசியுமே இதற்கு காரணம். இஸ்ரோ என்பது மிகப்பெரிய அமைப்பு. அதை வழிநடத்தி வந்தவர்கள் மிகவும் பெரியவர்கள். விக்ரம் சாராபாய், யூ.ஆர்.ராவ், கஸ்தூரிரங்கன், மாதவன் நாயர், கிரண்குமார், ராதாகிருஷ்ணன், சிவன், சோம்நாத் போன்றோர் வரிசையில்... நான் வந்திருப்பது மகிழ்ச்சியென்று சொல்வதைவிட, என்னுடைய 41 ஆண்டுகால கடின உழைப்பின் பலன் என்றுதான் கூறவேண்டும்.

Advertisment

உங்களைப்போல் கிராமப்புறத்திலிருந்து படித்து முன்னேற நினைக்கும் மாணவர் களுக்கு நீங்கள் கூற விரும்புவது?

ஆரம்பத்தில் என்னுடைய குடும்ப சூழலை நினைத்துப் பார்க்கும்போது இப்போதும் கண்ணீர்தான் வருகிறது. எந்த குடும்பச் சூழலிலிருந்து வருகிறோம் என்பது முக்கியமல்ல, எங்கு படிக்கிறோம் என்பதும் முக்கியமல்ல, எப்படி படிக்கிறோம் என்பதுதான் முக்கியம். தமிழில் படித்து பாலிடெக்னிக் பயின்ற நான், வேலை பார்த்துக்கொண்டே காரக்பூர் ஐ.ஐ.டி. யில் எம்.டெக், படிப்பில் முதல் மாணவனாகத் தேர்ச்சிபெற்ற பிறகு, விண்வெளி ஆய்வுத்துறை யில் ஆய்வு செய்து, கிரையோஜெனிக் தொடர்பாக முனைவர் பட்டம் பெற்று, இப்போது உச்சத்தைத் தொட்டிருக்கிறேன். படிப்பில் இரண்டுவிதம் இருக்கிறது. ஒன்று, நன்றாகப் படித்து அதிக மதிப்பெண் எடுப்பது. இரண்டாவது, நம்முடைய படிப்பால் சமுதாயத்துக்கும், மற்றவர்களுக்கும் என்ன செய்யவேண்டுமென்பது மனதில் இருக்க வேண்டும். நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் சேவை செய்யும் பெரிய குறிக்கோளுடன், கடின உழைப்பும் இருந்தால் நீங்கள் நினைப்பதை சாதித்துவிடலாம்.

நீங்கள் திட்ட இயக்குனராக இருந்து கிரையோஜெனிக்கை உருவாக்கிய பிறகுதான் உலக நாடுகள் இந்தியாவின் அறிவியல் வளர்ச்சியை வியந்து பார்த்தன. அதன் உருவாக்கத்தில் உங்களுடைய முயற்சி குறித்து?

Advertisment

இது ஒரு முக்கியமான வளர்ச்சி. சாதாரண மாக ஒரு கார் 100 கி.மீ. வேகத்தில் தான் போகும். ஆனால் சந்திராயனை நிலவுக்கு கொண்டுபோக 37 ஆயிரம் கி.மீ. வேகம் தேவை. அதன் இறுதிக் கட்டத்தில் மிகவும் தாழ்ந்த வெப்பநிலையுள்ள ஹைட்ரஜன், ஆக்சிஜனை பயன்படுத்தக்கூடிய கிரையோஜெனிக்கை நமக்கு மற்ற நாடுகள் தர முன்வரவில்லை. அதை நாமாகவே உருவாக்கி யது இஸ்ரோவின் வளர்ச்சியில் மிக முக்கியமான ஒன்று. இது நான் மட்டுமே எடுத்த முயற்சி யல்ல, ஒட்டுமொத்தமான கூட்டு முயற்சி இது. அதற்கு இயக்குனராக இருந்ததுதான் எனக்கு பெருமை. இந்த கிரையோஜெனிக், உலகில் 6 நாடுகளிடம்தான் உள்ளது.

ss

இஸ்ரோவின் அடுத்த திட் டம் என்ன?

சந்திராயன் 3-ஐ நிலவில் வெற்றிகரமாகத் தரையிறக்கியதில் இந்தியா முதல் நாடு. அடுத்து சந்திராயன்-4-க்கு அனுமதி கிடைத் துள்ளது. அதை நிலவில் தரை யிறக்கி, அங்கிருந்து சாம்பிள் எடுத்துவந்து ஆராய்ச்சி செய்யும் திட்டம் இருக்கிறது. மனிதனை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் திட்டமும் உள்ளது. இன்னும் பல திட்டங்களை நான் பதவியேற்ற பிறகுதான் சொல்ல முடியும்.

அறிவியலில் சாதிக்க நினைக்கும் புதிய தலைமுறை இளைஞர்களுக்கு உங்கள் அறிவுரை?

விஞ்ஞானத்தால் நாட்டிலுள்ள நிறைய பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். அதனால் இது மிகவும் முக்கியமான துறையாகும். இதில் படித்து முன்னேறும் மாணவர்கள், நாட்டுக்கு பலனளிக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடியும். அதற்கு இத்துறையைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் நன்றாகப் படிக்க வேண்டும். நூறாவது சுதந்திர தினம் கொண்டாடுவதற்குள் நம் இந்தியாவை முழு வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு முனைப்பாகப் படிக்கவேண்டும்!