பாகிஸ்தானுக்கான புதிய இந்திய தூதர் ஜெயந்த் கோபர்கடேவுக்கு விசா வழங்க முடியாது என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
1995-ஆம் ஆண்டு ஐ.எப்எஸ். அதிகாரியாக இருந்த ஜெயந்த் கோப்ரகடே கிர்கிஸ்தான் தூதராகவும், ரஷ்யா, ஸ்பெயின், கஜகஸ்தானில் துணை தூதராகவும் பணியாற்றியவர். இவரைக் கடந்த ஜூன் மாதம் பாகிஸ்தானின் தூதரக இந்திய அரசு நியமித்தது. இந்நிலையில், தங்கள் நாட்டுத் தூதராக ஜெயந்த் கோப்ரகடே நியமிக்கப்பட்டதை எதிர்க்கும் பாகிஸ்தான், அவர் மிகவும் மூத்த அதிகாரி என்றும், அவருக்கு விசா வழங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் பாகிஸ்தான் தூதரகத்தில் இருக்கும் சிலர் இந்தியாவை உளவு பார்த்த புகாரில் சிக்கியதால், அந்த தூதரகத்தில் உள்ள அதிகாரிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் குறைக்குமாறு இந்தியா உத்தரவிட்ட நிலையில், அதற்கு பழிவாங்கும் வகையில் பாகிஸ்தான் இவ்வாறு செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.