கூட்ஸ் வண்டியை மையப்படுத்தி சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்தவகையில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பொருட்களை எடுத்து செல்லும் கூட்ஸ் வண்டி ஒன்று மாடு இருப்பது தெரியாமல் டிரைவர் அதனை ஓட்டிச் செல்லும் வீடியோ,நெட்டிசன்கள் மத்தியில் வேகமாகப் பரவிவருகிறது. நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் கூட்ஸ் வண்டி ஒன்றில் நன்றாக பச்சை பசேலென புல் முளைத்து இருக்கிறது. வண்டி எங்கும் புற்கள் முளைத்து இருக்க, அதனை மேயும் ஆசையில் மாடு ஒன்று அதன்மீது ஏறி புல்லை மேய்கிறது.
அடேய்... மாட்டை எங்கடா கடத்திட்டு போறிங்க?
— ஆஹான்!! ? (@Kadhar_Twitz) September 25, 2019
புல்லு முளைக்கும் வரை குட்சை நிறுத்தி வைச்சது கூட தப்பில்லை ஆனால் மாடு மேய் வது கூட தெரியாம அதை எடுத்துப் போறிங்க பாரு அதான் தவறு ?? pic.twitter.com/YL96JcntDX
மாடு புல்லை மேய்ந்து கொண்டு இருப்பது தெரியாமல் அந்த கூட்ஸ் வண்டி செல்ல, அதோடு சேர்ந்து மாடும் புல்லை மேய்ந்து கொண்டே பயணம் செய்கிறது.இந்த வீடியோவை பார்த்தவர்கள் வண்டியில புல்லு மொளைக்க விட்டது தப்பில்ல, ஆனா மாடு மேயுறது தெரியாம ஓட்டிட்டு போறது தான் தப்பு என கமெண்ட் செய்து வருகின்றனர்.