Published on 15/01/2022 | Edited on 15/01/2022

இந்தியாவில் மருத்துவப் படிப்பில் சேர நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றுவருகிறது. இத்தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையும் நடைபெற்றுவருகிறது. அதன்படி, 2022 ஆம் ஆண்டில் MD,MS படிப்புகளில் சேர நடத்தப்படும் முதுநிலை நீட் தேர்வு ( NEET – PG ) வருகின்ற மார்ச் 12ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்படும் என மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
முதுநிலை நீட் தேர்வுக்கு இன்று மாலை 3 மணி முதல் பிப்ரவரி 4 ஆம் தேதி இரவு 11:55 மணி வரை https://nbe.edu.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,மார்ச் 12 ஆம் தேதி நடைபெறும் முதுநிலை நீட் தேர்வின் முடிவுகள் மார்ச் 31 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தேசிய தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.