Skip to main content

"தேசிய கல்விக்கொள்கையுடன்  நாடு முழுவதும் 14500 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்" - பிரதமர் மோடி 

Published on 06/09/2022 | Edited on 06/09/2022

 

"With the National Education Policy, 14500 schools will be upgraded across the country" - PM Modi

 

நாட்டின் புதிய கல்விக்கொள்கை சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்றுள்ளதாகப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

 

ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு நாடு முழுவதிலும் சிறப்பாக பணியாற்றிய 45 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய நல்லாசிரியர் விருதை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நேற்று வழங்கினார். தமிழகத்தில் இருந்து இராமநாதபுரம்  மாவட்டம் கீழாம்பல் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன் நல்லாசிரியர் விருதைப் பெற்றார்.

 

ஆசிரியர் தினவிழாவில் நல்லாசிரியர் விருது பெற்ற 45 ஆசிரியர்களுடன் தனது இல்லத்தில் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், நாடு முழுவதும் 14,500 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என்றும் தேசியக் கல்விக்கொள்கையின் முழு அம்சத்தையும் உள்ளடக்கிய மாதிரி பள்ளிகளாக செயல்படும் எனவும் கூறியுள்ளார். மேலும் அப்பள்ளிகளில் நவீன உள்கட்டமைப்பு வசதிகளும், ஸ்மார்ட் வகுப்பறைகளும், ஆய்வகங்களும், நூலகங்களும் இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

 

தேசிய கல்விக்கொள்கையை உருவாக்கியதில் ஆசிரியர்களின் பங்கு மிகப்பெரியது. மேலும், நாட்டின் புதிய கல்விக்கொள்கை சர்வதேச அளவில் பாராட்டுகளை பெற்றுள்ளதாக கூறிய பிரதமர் மோடி   இங்கிலாந்தை பின்னுக்குத்தள்ளி உலகின் ஐந்தாவது பெரிய நாடாக இந்தியா உருப்பெற்றுள்ளதாகவும் 250 ஆண்டுகள் நம்மை ஆண்டவர்களை பொருளாதார வளர்ச்சியில் பின்னுக்குத்தள்ளி இருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.