Skip to main content

புதுவை ஆளுநர் தமிழிசையை சந்தித்தார் என்.ரங்கசாமி!

Published on 03/05/2021 | Edited on 03/05/2021

 

N. Rangasamy met the Governor Tamilisai

 

புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி 16 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 10 சட்டமன்றத் தொகுதிகளிலும், பாஜக 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 

 

புதுச்சேரியில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி கைப்பற்றிய நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்.ரங்கசாமி முதல்வராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், என்.ஆர்.காங்கிரஸின் சட்டமன்றக் குழுத் தலைவராக என்.ரங்கசாமி தேர்வுசெய்யப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தர் ராஜனை என்.ரங்கசாமி சந்தித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்