Published on 27/04/2019 | Edited on 27/04/2019
சர்வர் பிரச்சனை காரணமாக இன்று காலை முதல் ஏர் இந்தியா விமான சேவை முடங்கியுள்ளது.
இன்று காலை 3 மணியளவில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் சர்வர் செயலிழந்ததால் பயணிகள் தகவல்கள் முடங்கியது. இதனால் காலை முதல் விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பயணிகள் கடும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், "சர்வர் பாதிப்பால் உலகம் முழுவதும் இயங்கும் ஏர் இந்தியா விமானங்களின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கூடிய விரைவில் இது சரிசெய்யப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.