Skip to main content

உருவானது மிதிலி புயல்

Published on 17/11/2023 | Edited on 17/11/2023

 

Mithili storm formed

 

கடந்த 14 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுப்பெற்று மத்திய மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி இருந்தது. இந்நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்பொழுது புயலாக மாறியுள்ளது.

 

தமிழகத்தில் பரவலாக வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலுக்கு மிதிலி (Midhili) எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மாலத்தீவு கொடுத்த பரிந்துரையின் பேரில் இப்பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த ஆண்டு இரண்டு புயல்கள் வங்கக் கடலில் உருவாகியது. இந்நிலையில் இந்த ஆண்டின் மூன்றாவது புயலாக மிதிலி உள்ளது. மிதிலி புயல் வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்த்து நாளை காலை வங்கதேசத்தின் மோங்லா மற்றும் கேபுபரா இடையே கரையைக் கடக்கக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் கரையைக் கடக்கும் பொழுது 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக் கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்