Skip to main content

வங்கி ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணம் உயர்வு!

Published on 01/01/2022 | Edited on 01/01/2022

 

Bank ATM transaction fees increase!

 

வங்கி ஏடிஎமில் பணம் எடுப்பதற்கான கட்டணங்கள் இன்று (01/01/2021) முதல் உயர்த்தப்பட்டுள்ளன. இதன்படி, ஒரு வாடிக்கையாளர் வங்கி ஏடிஎம்களில் அனுமதிக்கப்பட்ட இலவச பரிவர்த்தனைகளுக்கு மேல் மேற்கொள்ளும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் இதுவரை 20 ரூபாய் கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டு வந்த நிலையில், இனி 21 ரூபாய் பிடிக்கப்படும். 

 

தற்போதைய விதிகளின் படி ஒருவர் தங்களது கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்களில் இருந்து ஒரு மாதத்தில் ஐந்து பரிவர்த்தனைகளை இலவசமாக செய்துக் கொள்ளலாம். பிற வங்கி ஏடிஎம் பயன்பாட்டைப் பொறுத்தவரை பெருநகரங்களில் மூன்று பரிவர்த்தனைகளையும், சிறு நகரங்களில் ஐந்து பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ளலாம். இலவச பரிவர்த்தனைகளுக்கு மேல் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். வங்கி ஏடிஎம்களைப் பராமரிப்பதற்கு ஏற்படும் செலவுகள் அதிகரித்து வருவதைக் கணக்கில் கொண்டு, ஏடிஎம் கட்டணங்களை உயர்த்த ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. 


 

சார்ந்த செய்திகள்