சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இதன் உச்சகட்டமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு அமலில் இருந்தும் பொதுமக்கள் சாலைகளில் நடமாடி வருகிறார்கள். இந்நிலையில் இந்த ஊரடங்கு பற்றியும், நோயின் தாக்கம் குறித்தும் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். போலிசார் தேவையின்றி ஊர் சுற்றுபவர்களை எச்சரித்து அனுப்புகிறார்கள். அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் மேற்கு வங்க முதல்வர் அதிரடி காட்டியுள்ளார். பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு சென்ற அவர் கடுமையாக எச்சரிக்கை விடுத்தார். மேலும், மக்கள் விலகி இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தானே வட்டம் வரைந்து அதில் மக்களை நிற்க வைக்க வேண்டும் என்று கடைக்காரர்களிடம் தெரிவித்தார்.