Published on 12/11/2018 | Edited on 12/11/2018

ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக் மற்றும் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி ஆகிய இருவரும் கலந்துகொண்ட மேக் இன் ஒடிஷா மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட முகேஷ் அம்பானி, ஏற்கனவே இந்த மேக் இன் ஒடிஷா திட்டத்தில் 6000கோடி முதலீடு செய்திருக்கிறது ரிலையன்ஸ் குழுமம், மேலும் 3000 கோடி இதில் முதலீடு செய்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ஒடிஷாவிலுள்ள நகரம் மற்றும் பல ஆயிரம் கிராமங்களுக்கு ஜியோ சேவை சென்றடைந்துள்ளது. மேக் இன் ஒடிசா என்பது விரைவில் மேக் இன் நியூ ஒடிசா என்பதாக மாறும் என்று தெரிவித்தார்.