Published on 18/10/2023 | Edited on 18/10/2023

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை தீபாவளி போனசாக வழங்குவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
லோகோ பைலெட்கள், ஸ்டேஷன் மாஸ்டர், தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளிட்டோர் இந்த தீபாவளி போனஸால் பயன்பெறுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 11.07 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸாக 1,968.67 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் ரயில்வே செயல்பாடு சிறப்பாக உள்ளதால், 78 நாள் ஊதியத்தை போனஸாக மத்திய அரசு அறிவித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-23 ஆண்டில் சுமார் 650 கோடி பயணிகள் ரயில்களில் பயணம் செய்துள்ளதாகவும், இதே ஆண்டுகளில் 151 டன் சரக்குகளை ரயில்வே கையாண்டுள்ளதாகவும் மத்திய அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.