Published on 01/04/2020 | Edited on 01/04/2020
உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவதால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. அதன் ஒருபகுதியாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.
![maharastra corona virus updates](http://image.nakkheeran.in/cdn/farfuture/JYtnSzPo9dkY6EAEvUfcEnTlGgY1cwLVEadNi58c3lU/1585763035/sites/default/files/inline-images/1111_100.jpg)
மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 335 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பால் மகாராஷ்டிராவில் இன்று(4/1/2020) மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் புதிதாக 33 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.