Skip to main content

5 ஆண்டுகள் நீடிக்கும்.... யாரும் எதிர்க்கட்சிகளுக்கு போகவில்லை...- குமாரசாமி

Published on 27/09/2018 | Edited on 27/09/2018
kumarasamy


கர்நாடாகாவில் தற்போது மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி நடக்கிறது. கர்நாடகாவின் முதலமைச்சராக மஜத கட்சியின் தலைவர் குமாரசாமி பதவி வகுக்கிறார். இந்த கூட்டணி ஆட்சி அமைந்த போதிலும் இது நிறந்தரம் இல்லை என்ற ரீதியிலேயே சில விஷயங்கள் நடக்கின்றது. கர்நாடக பாஜக இந்த கூட்டணியை உடைக்க சதி திட்டம் தீட்டுகிறது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், மஜத காங்கிரஸ் ஆகிய இரு கட்சிக்குள்ளேயே அவ்வப்போது விரிசலடைந்திருப்பது, சில மூத்த தலைவர்களின் பேட்டியில் தெரிந்தது.
 

இந்நிலையில், கர்நாடகாவில் எனது தலைமையிலான ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும். கர்நாடகாவில் நிச்சயமற்ற அரசியல் சூழல் இல்லை என்று கர்நாடகா முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். மேலும், 18 சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்கட்சிக்கு போவதாக வந்த தகவல் தவறானது என குமாரசாமி தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்