Published on 26/12/2020 | Edited on 26/12/2020
உலகை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ், தற்போது மரபணு மாற்றமடைந்து, புதிய வகை கரோனவாக மாறியுள்ளது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில், இந்தப் புதிய வகை கரோனா வேகமாகப் பரவி வருகிறது. இந்த புதிய வகை கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக, இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவில் இருந்து விமானங்கள் வர பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன.
இந்தநிலையில், இங்கிலாந்திலிருந்து கடந்த ஒரு வாரத்தில் கேரளா திரும்பியவர்களில் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது எனக் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே சைலாஜா கூறியுள்ளார்.
கரோனா தொற்று உறுதியாகியுள்ள 8 பேரின் மாதிரிகளும், புதிய வகை கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என அறிவதற்காக புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.