![dfdgdf](http://image.nakkheeran.in/cdn/farfuture/RyJ2uzZSutDSLKzghgdfCyQjZrp1CUM23QMSn2Q_7is/1550053140/sites/default/files/inline-images/vijay-1-std.jpg)
நடிகர் விஜய் தான் கேரளாவில் தற்போது பெரிய நடிகர் என கேரள எம்.எல்.ஏ ஜார்ஜ் பேசியுள்ளது அங்குள்ள ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் அவர் கலந்துகொண்டு பேசும்போது, “கேரள தியேட்டர்களில் விஜய்க்கு மிகப்பெரிய கட் அவுட்கள் வைக்கப்பட்டு, அவரது ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்வதை நான் உள்பட பலரும் பார்த்து இருக்கிறோம். கேரளாவில் உள்ள முன்னணி மலையாள நடிகர்களை விட விஜய்க்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்” என கூறினார். மம்மூட்டி, மோகன்லால் படங்களை விட விஜய் படங்களுக்கு வர்த்தகம் அதிக அளவு உள்ளது எனவும் கூறினார். அவரது இந்த கருத்துக்கு மலையாள சினிமா ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விஜய்க்கு ரசிகர்கள் இருப்பது உண்மைதான், ஆனால் மம்மூட்டி, மோகன்லால் அளவுக்கு இல்லை என கூறி எம்.எல்.ஏ ஜார்ஜுக்கு எதிராக மலையாள ரசிகர்கள் சமூகவலைதளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டுவருகின்றனர்.