Published on 23/02/2019 | Edited on 23/02/2019
![fghfhggfgfh](http://image.nakkheeran.in/cdn/farfuture/mK-8CV5jfo044g9oINZqurQ-KwIRP7EpWfNaxm28ZAc/1550943294/sites/default/files/inline-images/kejri-std.jpg)
டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி வரும் மார்ச் 1 ஆம் தேதிமுதல் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார்.
கடந்த மாதம் மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, துணைநிலை ஆளுநர் கிரன் பேடியின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
தற்போது அதனை தொடர்ந்து டெல்லி முதல்வர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார். யூனியன் பிரதேசமான டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி இந்த தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார்.