Published on 11/01/2019 | Edited on 11/01/2019
![dtrh](http://image.nakkheeran.in/cdn/farfuture/6zKzD_IkB-kFL37eCOXcTWl7RGPxL3qahjVbGgqCRUs/1547224328/sites/default/files/inline-images/news-18-14-std.jpg)
உத்தரகண்ட் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவரான அனில் கோயலுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். டெஹ்ராடூன், யமுனாநகர் மற்றும் தில்லி ஆகிய இடங்களில் உள்ள அவருக்கு சொந்தமான தொழில் நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் சோதனைகளை நடத்தினர். டெஹ்ராடூனில் அவருக்கு சொந்தமான குவாலிட்டி ஹார்ட்வர்ஸ், அலெக்ஸா பேனல்ஸ், பஞ்சாப் ப்ளைவுட் இந்தியா மற்றும் குவாண்டம் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 13 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்நிறுவங்கள் மீது விற்பனையை மறைத்தல், கணக்கில் வராத ரசீதுகள், முதலீடுகள் ஆகியவை கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அந்த நிறுவனங்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.