Skip to main content
Breaking News
Breaking

முடிந்தால் நேரடியாக மோதுங்கள்- பாஜக ம.பி. முதல்வர் 

Published on 03/09/2018 | Edited on 03/09/2018
sivraj


மத்திய பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில், முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மாநிலம் முழுவதும் பிரச்சாரங்கரில் ஈடுபட்டு வருகிறார். 
 

பிரச்சாரத்திற்காக சித்தி மாவட்டம் சூர்ஹாத் பகுதிக்குச் சென்றார். ரதம் போன்று வடிவமைக்கப்பட்ட பேருந்தில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். திடீரென அடையாளம் தெரியாத நபர்கள் அந்த பேருந்தை கற்களை கொண்டு தாக்கினார்கள். இச்சம்பவத்தில், சிவராஜ் சிங் சவுகானுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பிரச்சார பேருந்து தாக்கப்பட்ட பகுதி எதிர் கட்சி தலைவரான அஜய் சிங் போட்டியிடும் தொகுதிக்கு உட்பட்ட பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து பிரச்சார மேடையில் பேசிய சவுகான், காங்கிரஸ் கட்சி தலைவரான அஜய் சிங் உங்களுக்கு தைரியம் இருந்தால் நேரடியாக வந்து மோதுங்கள் என்று சவாலிட்டார்.
 

இந்நிலையில், அஜய் சிங், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் யாரும் தங்கியிருக்க மாட்டார்கள். அந்த பகுதி மக்களும் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள். எங்களுக்கு வன்முறை கலாச்சாரம் செய்யத் தெரியாது என்று பதிலளித்துள்ளார். மேலும், யாரோ சாதி செய்து பழியை எங்கள் மீது சுமத்த திட்டமிட்டுதான் இவ்வாறு செய்கின்றனர் என்று கூறியுள்ளார்.  
                

சார்ந்த செய்திகள்