உலக விண்வெளி வாரத்தையொட்டி உச்ச பாதுகாப்பு கொண்ட விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் இரண்டு நாட்கள் பார்வையாளர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
விஎஸ்எஸ்சி/ இஸ்ரோ உலக விண்வெளி வாரம் கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் கொண்டாடப்படுகிறது. உச்சக்கட்ட பாதுகாப்பு கொண்ட இந்த விண்வெளி மையத்தில் நாளை மற்றும் மறுநாள் அக்டோபர்- 9 மற்றும் அக்டோபர்- 10 ஆகிய தேதிகளில் (இரண்டு நாட்கள்) பார்வையாளர்கள் தினமாக அனுசாரிக்கப்படுகிறது. அதனால் இரு தினங்களுக்கு மட்டும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள், பொதுமக்கள் பார்வையாளர்களாக இலவசமாக அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த இரண்டு நாட்களும் விண்வெளி அருங்காட்சியகத்தையும், ராக்கெட் ஏவுதளத்தையும் கண்டு மகிழலாம். இதற்கு அந்த இரண்டு நாட்களும் காலை 9.30 மணிமுதல் மாலை 4.30 மணி வரை அனுமதிக்கப்படுகிறார்கள். பார்வையாளர்கள் தங்கள் வருகையை ( தனியாகவோ அல்லது குழுவாகவோ) https://wsweek. Vssc. gov. in என்ற இணையதள பக்கத்தின் இணைப்பு வழியாக பதிவேற்றி வரிசை எண்ணை பெற்று கொள்ள வேண்டும். இதற்காக பதிவு செய்யப்பட்ட நேரத்திற்கு ஓரு மணி நேரம் முன்னதாக செல்ல வேண்டும்.