Published on 24/09/2020 | Edited on 24/09/2020
இந்திய கலாச்சார வரலாற்று ஆய்வுக்குழுவை கலைக்க வேண்டும் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 32 எம்.பிக்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
அந்த கடிதத்தில், 'இந்தியாவின் பன்மைத்துவத்தை பிரதிபலிக்கும் 16 பேர் கொண்ட குழுவில் தென்னிந்தியர்கள் இல்லை. 16 பேர் கொண்ட ஆய்வுக்குழுவில் வடகிழக்கு இந்தியர்கள், சிறுபான்மையினர் இடம் பெறவில்லை. மத்திய அரசால் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட ஆய்வாளர்கள் அக்குழுவில் இல்லை. பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் நிபுணர் குழு இல்லை. தற்போதைய குழுவின் ஆய்வு வரலாற்று திரிபுகளுக்கு வழிவகுத்துவிடும். எனவே, இந்திய கலாச்சார தோற்றம் குறித்து ஆய்வு செய்யும் குழுவை கலைக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.