![india coronavirus samples tested details icmr](http://image.nakkheeran.in/cdn/farfuture/Ldg10KW6uEbQ5XOlOGP-66QyS_e4QpB255b9479Fp9E/1604462875/sites/default/files/inline-images/icmr04_0.jpg)
நாடு முழுவதும் நேற்று (03/11/2020) வரை மொத்தம் 11,29,98,959 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது. அதேபோல், நாடு முழுவதும் நேற்று (03/11/2020) ஒரேநாளில் மட்டும் 12,09,609 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இந்தியாவிலேயே அதிகபட்சமாக, தமிழகத்தில் நேற்று (03/11/2020) வரை மொத்தம் 1,01,69,917 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று (03/11/2020) மட்டும் தமிழகத்தில் 70,398 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு, புதுச்சேரி, டெல்லி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் உட்பட பல்வேறு மாநில அரசுகளும் நாள்தோறும் கரோனா பரிசோதனைகளை தங்களது மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.