Published on 29/03/2020 | Edited on 29/03/2020
சீனாவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கரோனா வைரஸ், தற்போது 175 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகில் மொத்தம் 6,66,000க்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகள் கரோனாவிற்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்படோர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கரோனா பாதிப்பால் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.