Skip to main content

2 கோடி நாட்டு மாடுகள் அழிந்துவிட்டது... கால்நடை கணக்கெடுப்பில் தகவல்...

Published on 19/10/2019 | Edited on 19/10/2019

நாடு முழுவதும் எடுக்கப்பட்டுள்ள கால்நடைகள் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பில், பல்வேறு மாநிலங்களில் நாட்டு மாடு இனங்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்துள்ள விவரம் தெரிய வந்துள்ளது.

 

cattle sensus

 

 

கால்நடை  கணக்கெடுப்பின்படி, கடந்த 2012-ம் ஆண்டில் 19கோடியாக இருந்த மாடுகளின் எண்ணிக்கை 2019-ம் ஆண்டில் 19.24 கோடியாக அதிகரித்துள்ளது என தெரிய வந்துள்ளது. ஆனால் அதேநேரம், 2012-ம் ஆண்டில் 3.9 கோடியாக இருந்த கலப்பின மாடுகளின் எண்ணிக்கை 2019-ம் ஆண்டில் 5.04 கோடியாக அதிகரித்துள்ளது. ஆனால் நாட்டு மாடுகளின் எண்ணிக்கையை பொறுத்தவரை, 2012ல் 16 கோடியாக இருந்தது, தற்போது 13.98 கோடியாக குறைந்துள்ளது என தெரியவந்துள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்