
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜிக். இவர் எஸ்டிபிஐ கட்சியின் கோவை மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார். அதேபோல் மேட்டுப்பாளையம் பகுதியில் பழக்கடை வைத்திருப்பவர் ரீலா மற்றும் பாகித் ரஹ்மான் என மூவர் வீடுகளிலும் நேற்று காலை முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதிக அளவில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. கேரள பதிவெண் கொண்ட காரில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய துணை பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புடன் சோதனையில் நடைபெற்றது.
சுமார் பத்து மணி நேரம் இரவு வரை அங்கு சோதனை நடைபெற்றது. சோதனை இறுதியில் பாகித் ரஹ்மான் என்ற எஸ்டிபிஐ கட்சி நிர்வாகியை அமலாக்கதுறையினர் கைது செய்தனர். அவரை கைது செய்து அழைத்துச் செல்வதற்கு அங்கு குவிந்த எஸ்டிபிஐ கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.