![MURDER](http://image.nakkheeran.in/cdn/farfuture/XGoEN-8uoarEVFwUv-2Iv2AlOxVTVbIit_PwjqaELkI/1535888118/sites/default/files/inline-images/dfdfdfdf.jpg)
கேரளா மாநிலம் திருச்சூர் வெள்ளிக்குளங்கரா பகுதியை சேர்ந்தவர் 91 வயதான செரியா குட்டி. இவர் குடும்ப பிரச்சனை காரணமாக தனது 83 வயதான மனைவி கொச்சுதிரேசியா என்பவரை கொலை செய்து எரித்துள்ளார்.
![MURDER](http://image.nakkheeran.in/cdn/farfuture/HkWv8iJWRpFhAmkN5pwIoVPbGsGmCnD_tGZvVnN7b9o/1535888138/sites/default/files/inline-images/asasasa.jpg)
செரியா குட்டி- கொச்சு திரேசியா தம்பதியருக்கு மொத்தம் 7 குழந்தைகள் உள்ளனர். திருச்சூர் வெள்ளிக்குளங்கராவில் தனியாக வசித்து வந்த இவர்கள் இருவருக்கு அடிக்கடி குடும்ப சண்டை வந்துள்ளது. இதனைஅடுத்து கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி தாய் கொச்சுதிரேசியாவை காணாவில்லை என்று மகனான ஜோபி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கொச்சுதிரேசியாவை 91 வயது கணவரான செரியாக்குட்டிதான் கொலை செய்து அதை மறைக்க உடலை எரித்துள்ளார் என தெரியவந்துள்ளது. அடிக்கடி ஏற்பட்ட குடும்ப சண்டை இறுதியில் கொலையில் முடிந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.