Skip to main content

எல்லை பிரச்சனை; இந்தியா -சீனா நாளை 12வது கட்ட பேச்சுவார்த்தை!

Published on 30/07/2021 | Edited on 30/07/2021

 

india - china

 

இந்தியா மற்றும் சீன ராணுவத்தினர் இடையே கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்தாண்டு மோதல் வெடித்தது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணமடைந்தார்கள். இந்த மோதலில் 40க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், நால்வர் மட்டுமே உயிரிழந்ததாக சீனா கூறியுள்ளது.

 

இந்த மோதலைத் தொடர்ந்து இந்தியா - சீனா இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. படை விலக்கல் தொடர்பாகவும், படை குறைப்பு தொடர்பாகவும் இரு நாடுகளிடையே சில தீர்மானங்கள் எட்டப்பட்டன. அந்த தீர்மானங்கள் படிப்படியாக அமலுக்கு வருகின்றன.

 

இதற்கிடையே ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் பங்கேற்ற சீன வெளியுறவுத்துறை அமைச்சரும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் சந்தித்து எல்லை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்திய - சீன மூத்த இராணுவ தளபதிகளுக்கிடையேயான கூட்டத்தை விரைவில் கூட்ட இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

 

இந்தநிலையில், இந்தியா மற்றும் சீனா இடையேயான 12வது கட்ட படைத்தளபதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை, சீன பகுதியில் உள்ள மால்டோவில் நடைபெறவுள்ளதாக இந்திய இராணுவத்தின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஹாட் ஸ்பிரிங்ஸ் மற்றும் கோக்ரா ஹைட்ஸ் பகுதிகளில் படைகளை விலக்குவது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 


 

சார்ந்த செய்திகள்