Skip to main content

கனிமொழிக்கு முக்கிய பதவி? - கூடியது காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்

Published on 08/06/2024 | Edited on 08/06/2024
 Important post for Kanimozhi?-Congress consultative meeting convened

இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. இதனால் ஆட்சி அமைக்க தனிப்பெம்ருபான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளார்.

நாளை பிரதமர் பதவியேற்பு மற்றும் அமைச்சரவை பதவியேற்பு விழா பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று தற்போது நாடாளுமன்றக் காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. பழைய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்று வருகின்ற கூட்டத்தில் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். ஏற்கெனவே காங்கிரஸ் செயற்குழுவில் மக்களவை காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், நாடாளுமன்றக் குழு தலைவராக சோனியா காந்தியை நியமனம் செய்வதற்கு ஆலோசனை நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சி துணைத் தலைவராக திமுக எம்பி கனிமொழியை நியமனம் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

சார்ந்த செய்திகள்