உத்திரபிரதேசம் மாநிலம் அலகாபாத்தில் மனைவி மூன்று மகள்கள் உட்பட நான்கு பேரை கொன்ற நபர் தானும் தூக்கிட்டுக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![MURDER](http://image.nakkheeran.in/cdn/farfuture/nkrFRBZoeyk6A8gUPu6mg83KOVMm4c41WzbQa8t6KB8/1534854078/sites/default/files/inline-images/Untitled-1_24.jpg)
உத்திரபிரதேசம் மாநிலம் அலகாபாத்திலுள்ள துமகன்ஞ் பகுதியை சேர்ந்த மனோஜ் குஷ்வாக என்பவர் வீட்டில் நேற்று இரவு குடும்பத்தகறாரு ஏற்பட்டுள்ளது. அடுத்தநாள் காலையான இன்று அவர் வீட்டு பகுதியில் நடமாட்டம் இல்லாததால் அக்கம்பக்கத்தினர் போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். அப்போது அங்கு வந்த போலீசார் வீட்டை திறந்தது பார்த்த பொழுது வீட்டில் இருந்த மின்விசிறியில் மனோஜ் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
![MURDER](http://image.nakkheeran.in/cdn/farfuture/Y4g1zEmcRzGWC_LMiIhBZSwAJOhNYSWWbRKi2VXPYes/1534854102/sites/default/files/inline-images/tgfgfgf.jpg)
மேலும் வீட்டை ஆய்வு செய்ததில் அவரது மனைவி கொலை செய்யப்பட்டு ஃப்ரிட்ஜிலும், அவரது மூன்று மகள்கள் கொலை செய்யப்பட்டு சூட்கேசில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால்தான் இந்த கொலை நடந்திருக்கும் என அருகிலிருப்போர் கூறுகின்ற நிலையில் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்கான உண்மையான காரணம் என்னவென்று விசாரித்து வருகின்றனர்.