Published on 14/09/2020 | Edited on 14/09/2020
![j](http://image.nakkheeran.in/cdn/farfuture/IXQR7N4kUO1fqhe1gXwFfnh9HH4b8EsYSFms68_Qzlk/1600056458/sites/default/files/inline-images/aaaaaaafh_1.jpg)
உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. மராட்டியத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கரோனா தடுப்பூசி சோதனை பரிசீலனையில் இருந்து வருகின்றது. 20 க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் சோதனையில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், விரைவில் கரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.