ஆதார் எண்ணுடன், பான் எண்ணை இணைப்பதற்கு வரும் மார்ச் 31 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குள் இரண்டையும் இணைக்காதவர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
![how to link aadhar and pan card](http://image.nakkheeran.in/cdn/farfuture/WpCC6wKE-vpincIqrAsnyfanNb0hQi-SOxsHBip9MzY/1583213837/sites/default/files/inline-images/dfbzdfh.jpg)
சட்டவிரோத பண பரிமாற்றம், மற்றும் வருமான வரி குறித்த தகவல்களில் செய்யப்படும் முறைகேடுகளை தடுப்பதற்காக ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியுடன் இரண்டையும் இணைப்பதற்கான காலக்கெடு முடிவடைவதாக இருந்த சூழலில், 2020, மார்ச் 31 வரை இந்த காலக்கெடு நீடிக்கப்பட்டது. இதற்கான நாளும் நெருங்கிவரும் சூழலில், மார்ச் 31 க்குள் இரண்டையும் இணைக்காதவர்களுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆதார் மற்றும் பான் கார்டை இணைப்பதற்கான வழி:
1. incometaxindiaefiling.gov.in என்ற தளத்திற்கு செல்லவும்
2. Quick Links என்பதன்கீழ் Link Aadhaar கிளிக் செய்யவும்
3. திரையில், பான் எண், ஆதார் எண் உள்ளிட்டவற்றை பதிவிட்டு இணைத்துக்கொள்ளலாம்.
4. ஏற்கெனவே இணைக்கப்பட்டிருந்தால், அது குறித்த தகவல் காண்பிக்கும்