Skip to main content

இப்படியும் சிலர்...201 ரூபாயும், உணர்ச்சிப்பூர்வமான சம்பவமும்

Published on 17/10/2022 | Edited on 17/10/2022

 

Haryana incident returning rs 201 money after one and half years going viral

 

திடீரென ஒருவரின் Phonepe அக்கவுன்ட்டுக்கு வந்த 201 ரூபாயும் அதற்குப் பின்னால் இருக்கும் உணர்ச்சிப் பூர்வமான சம்பவமும் தற்போது சோசியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

 

ஹரியானா மாநிலம் குர்கான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கமல் சிங். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். கமல் சிங், கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு முகம் தெரியாத நபருடைய அம்மாவின் மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்வதற்காக 201 ரூபாயை ஃபோன்பே மூலம் அனுப்பியிருக்கிறார். அந்த நபருக்கு பணம் அனுப்பியதோடு மட்டுமல்லாமல் “என்னால் முடிந்த சிறிய உதவி. அம்மாவை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்” என்று குறுஞ்செய்தியையும் அனுப்பியுள்ளார். அந்தப்  பணத்தைப் பெற்ற நபர், கமல் சிங்குக்கு நன்றியும் தெரிவித்திருக்கிறார். காலப்போக்கில் இந்த சம்பவத்தை மறந்த கமல்சிங் அவரின் அன்றாட வேலைகளை கவனித்து வந்துள்ளார்.

 

இந்த நிலையில் கடந்த 11 ஆம் தேதியன்று திடீரென கமல் சிங்கின் ஃபோன்பே கணக்கில் 201 ரூபாய் கிரெடிட் ஆகியுள்ளது. அப்போது இந்த பணத்தை யார் அனுப்பியது என்று கமல்சிங்குக்கு தெரியாமல் இருந்துள்ளது. அதன் பிறகு, பணம் வந்த சாட் மெசேஜை திறந்து பார்த்தபோது கமல் சிங்குக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

 

ஒன்றரை வருடங்களுக்கு முன், முகம் தெரியாத நபரின்  அம்மாவின் மருத்துவ சிகிச்சைக்கு கமல்சிங் அனுப்பிய 201 ரூபாயை அந்த நபர் திருப்பி அனுப்பியுள்ளார். இதைப் பார்த்து நெகிழ்ச்சியடைந்த கமல் சிங் அவருடைய அம்மாவின் உடல்நலத்தைப் பற்றி விசாரித்து மெசேஜ் அனுப்பினார்.

 

Haryana incident returning rs 201 money after one and half years going viral

 

இது குறித்து கமல் சிங் கூறியது: “என்னுடைய ஃபோன்ஃபே கணக்கில் 201 ரூபாய் கிரெடிட் ஆனதை பார்த்து ஆச்சரியமாக இருந்தது. ஆனால், யாரிடமிருந்து என்பது தெரியவில்லை. பின்னர், அதில் நான் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ஒரு சமூக வலைதளத்தில் ஒரு கிரவுட் ஃபண்டிங் கோரிக்கைக்கு ஒரு நபருக்கு என்னால் முடிந்த தொகையை அனுப்பினேன்.” என்பது தெரிந்தது.

 

பணத்தை திருப்பி அனுப்பிய நபர் கூறியது...அம்மா நலமாக இருக்கிறார். என்னுடைய பிஸ்னஸும் நன்றாக இருக்கிறது. அதனால்தான், எனக்கு இக்கட்டான சூழ்நிலையில் உதவி செய்தவர்களுக்கு தான் பெற்ற பணத்தை திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறேன். நன்றி, என்று பதில் அனுப்பினார். இந்த உரையாடலை, கமல் சிங் அவருடைய லிங்க்டு-இன் கணக்கில் பதிவிட்டு அந்த நபரை பாராட்டியுள்ளார். இந்த நிகழ்வு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணமான பெண்ணுடன் தப்பிச் சென்றவரை சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
The forcing a man to drink urine for eloping with married woman

திருமணமான பெண்ணுடன் தப்பிச் சென்றுடன் ஒருவரை, கிராம மக்கள் அடித்து துன்புறுத்தி, கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்து, காலணி மாலை அணிவித்து ஊர்வலம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய பிரதேசம் மாநிலம், உஜ்ஜைன் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நபர், திருமணமான பெண்ணுடன் ஊரைவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் கிராமம் முழுவதும் பரவிய நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்ற அவர்களைப் பிடித்து கிராம மக்கள் தங்கள் கிராமத்திற்கு அழைத்து வந்து கொடுமைப்படுத்திய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இது தொடர்பான வீடியோவில், பாதிக்கப்பட்ட நபரது தலைமுடி மற்றும் மீசையின் சில பகுதிகள் மொட்டையடிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த இளைஞரை மரத்தில் கட்டி வைத்து செருப்பு மாலை அணிவித்து கிராம மக்கள் தாக்கியுள்ளனர். அவரை வலுக்கட்டாயமாக பாட்டிலில் இருந்து சிறுநீரை குடிக்க வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். அவருடன் தப்பிச் சென்ற பெண்ணையும் தாக்கி கொடுமைப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

இது குறித்து போலீசார் கூறுகையில், ‘வீடியோக்கள் காவல்துறையின் கவனத்திற்கு வந்த பிறகு, நாங்கள் பாதிக்கப்பட்டவரின் வீட்டை முன்கூட்டியே தொடர்பு கொண்டோம், ஆனால் அவர் அங்கு இல்லை. பாதிக்கப்பட்ட நபருடன் நான் தொலைபேசியில் பேசினேன். அவர் எங்களை சந்திப்பார். குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் சம்பவம் நடந்த இடத்தை சரிபார்த்த பிறகு, சட்ட நடவடிக்கை தொடங்கப்படும். சம்பவத்தின் பின்னணி குறித்து இன்னும் தெளிவாக இல்லை. பாதிக்கப்பட்டவருடன் பேசிய பிறகு உறுதி செய்யப்படும் என்று’ என்று கூறினர். 

Next Story

ஓசியில் சிக்கன் பக்கோடா தராத கடைக்காரருக்கு கத்திக்குத்து-வெளியான பரபரப்பு காட்சிகள்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
shopkeeper who won't serve chicken baguettes;viral video

சென்னையில் ஓசியில் சிக்கன் பக்கோடா தராததால் கடைக்காரருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை அம்பத்தூர் பகுதியில் சிக்கன் பக்கோடா கடை ஒன்றுக்கு வந்த இளைஞர்கள் சிலர் ஓசியில் சிக்கன் பக்கோடா கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் கடைக்காரர் தர மறுத்ததால் அந்த இளைஞர்கள் கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த சாலையில் திடீரென சிக்கன் பக்கோடா கடையில் மோதல் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த இளைஞர்கள் ஹெல்மெட் மற்றும் மரப்பலகையால் கடை உரிமையாளரை தாக்கியதோடு, கத்தியால் கடை உரிமையாளரின் கழுத்தில் தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளனர்.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பிடிப்பதற்குள் அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பினர் .பக்கோடா கேட்டு தகராறு செய்த அந்த இளைஞர்கள் மது போதையில் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்த போலீசார் ஓசியில் சிக்கன் பக்கோடா கேட்டு தகராறு செய்து கடை உரிமையாளரை கத்தியால் தாக்கிய அந்த இளைஞர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.