Skip to main content

81 வருட தமிழ் பள்ளியை மூடும் குஜராத் அரசு.. கேள்விக்குறியாகும் மாணவர்களின் படிப்பு!

Published on 23/09/2020 | Edited on 23/09/2020

 

Gujarat government to close 81-year-old Tamil school ..

 

 

‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்று வெளிநாடுகளிலும் இந்தியாவினுள்ளும் தமிழின் பெறுமையைப் பற்றி பேசும் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலத்தில் தமிழ் பள்ளியை மூட அரசாங்கம் முயன்று வருகிறது. 

 

பள்ளியை மூட வேண்டாம் என்று மாவட்ட கல்வி அலுவலர் வரை சந்தித்துவிட்டனர் குஜராத் வாழ் தமிழ் மக்கள். ஆனால் பள்ளியை மூடி மாற்றுச்சான்றிதழை கொடுக்க காலக்கெடுவும் விதித்துவிட்டது பள்ளி நிர்வாகம். 

 

குஜராத் மாநிலம் அகமதாபாத் தமிழ் மேல்நிலைப்பள்ளி கடந்த 81 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படித்த ஏராளமானோர் பல்வேறு அரசுத்துறையிலும் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் தற்போது மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறி பள்ளியை மூட பள்ளி நிர்வாகமும் மாவட்டக்கல்வி நிர்வாகமும் முடிவெடுத்து அறிவிப்பும் செய்துள்ளனர். 

 

Gujarat government to close 81-year-old Tamil school ..

 

 

ஆனால் தமிழ் மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர்களான தமிழர்களும் பள்ளியை மூடக்கூடாது. பள்ளியை மூடினால் படிப்பு வீணாகும் என்று மாவட்ட கல்வி அலுவலர் தொடங்கி கல்வி அமைச்சர் வரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் குஜராத் வாழ் தமிழர்களின் கோரிக்கையை அரசும் அதிகாரிகளும் ஏற்றதாக தெரியவில்லை.

 

அதாவது செப்டம்பர் 23ஆம் தேதி மதியம் 12 மணிக்குள் மாணவர்கள் பள்ளியில் மாற்றுச் சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம்தான் மாற்றுச் சான்றிதழ் பெறமுடியும் என்று நோட்டிஸ் ஒட்டியுள்ளது. இந்த நிலையில் மாணவர்களின் பெற்றோர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளதுடன் தமிழ்ப்பள்ளி மூடுவதை தடுக்க குஜராத் வாழ் தமிழர்கள் ஒன்று சேர வேண்டும் என்றும் அழைப்பு கொடுத்துள்ளனர். இதுதான் மோடிஜியின் தமிழ் பற்றா? என்று குஜராத் வாழ் தமிழ் மக்கள் வருத்தும் தெரிவித்துவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குஜராத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
worth Rs.300 crore seized in Gujarat

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். 7 பேர் கைதான நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் என்றும் கூறப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி  சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.